وَلاَ تَلْبِسُواْ الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُواْ الْحَقَّ وَأَنتُمْ تَعْلَمُونَ 42
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். திருக்குர்ஆன் 2:42
இன இழிவு தீர இஸ்லாமே தீர்வு
பரந்து விரிந்த இந்தியப் பெருநாட்டில் விரல்விட்டு எண்;ணக்கூடிய ஒரு நாடோடிக் கூட்டம் இந்திய மண்ணில் பிறந்து வளர்ந்து, இந்திய மண்ணை நேசிக்கும் பெரும்பான்மையின மக்களை கடவுள் பெயரைச் சொல்லி அடிமைப் படுத்தி அவர்களை சுரண்டி உண்டு கொழுத்தனர், ஒரு சாரார் பிரம்மனின் தலையில் பிறந்தார்கள் அவர்களே மனிதர்களில் உயர்ந்த அந்தஸ்து உடையவர்கள் அவர்களே வேதத்தை ஓத கடமைப் பட்டவர்கள், அடுத்த சாரார் பிரம்மனின் தொடையில் பிறந்தார்கள் அவர்கள் அதற்கடுத்த ரேஞ்சு( வேதம் மட்டும் ஓத முடியாது ), ஒரு சாரார் பிரம்மனின் காலில் பிறந்தார்கள் அவர்களே அனைவரையும் விட இழிபிறவிகள் என்றுக்கூறி மேல்படி நாடோடிக் கும்பலினால் அடிமைப் படுத்தப்பட்ட பெரும்பான்மையின மண்ணின் மைந்தர்களின் அடிமை விலங்குகளை உடைத்தெறியவும், அநீதியிலிருந்து மீட்டெடுப்பதற்காகவும் தந்தை பெரியார் அவர்கள் மண்ணின் மைந்தர்களில் சில விடுதலை விரும்பிகளை ஒன்று திரட்டி ஒருக் குழுவை ஏற்படுத்தி மேல்படி நாடோடிக் கும்பலின் பிடியிலிருந்து அப்பாவி மக்களை விடுவிப்பதற்கு முள்ளை முள்ளால் எடுக்கும் திட்டம் தீட்டினார்.
எந்த கடவுட் கொள்கையால் கவரப்பட்டு மக்கள் தங்களை அவர்களிடம் அர்ப்பனித்து அடிமை விலங்கை பூட்டிக் கொண்டனரோ அந்த அடிமை விலங்கை உடைத்தெறிவதற்காக அதே கடவுட் கொள்கையை எதிர் பிரச்சாரமாக மாற்றினார் முதலில் அவர்கள் கூறும் கற்பனை கடவுள்களை அறவே இல்லை என்று மறுத்தார் அத்துடன் அவர்கள் கூறுவது பொய்யெனவும், அது ஒரு மோசடி எனவும் தர்க்க ரீதியாக வாதிட்டு மக்களை வெல்வது என்ற முடிவை மேற்கொண்டார் இது தான் முள்ளை முள்ளால் எடுக்கும் திட்டம். மேல்படி திட்டத்தில் ஓரளவு வெற்றியும் கண்டார்.
எந்த அரசியல் வாதிகளுடைய தயவு தாட்சன்யமுமின்றி தன்னை நம்பி வந்து தான் உருவாக்கிய இயக்கத்தில் இணைந்து செயலாற்றிய தொண்டர்களை மட்டும் நம்பி இயக்கம் நடத்தினார்.எந்த அரசியல் வாதிகளிடமும் பேரம் பேசி சோரம் போனதில்லை அவர் இயக்கம் நடத்திய பொழுது அனைத்து அரசியல் வாதிகளும் அவரிடம் வந்து ஆசிபெறும் அளவுக்கு, ஆலோசனை கேட்கும் அளவுக்கு நடந்து கொண்டார்.
வந்தேறி சிறுபான்மைக் கூட்டம் மண்ணின் மைந்தர்களில் பெரும்பான்மை மக்களை கடவுள் பெயரைச் சொல்லி அடிமைப் படுத்தியதால் அவர்களை மீட்டெடுப்பதற்காக மட்டுமே அவர்கள் அறிமுகப்படுத்திய பலகடவுட் கொள்கையை மறுத்து எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார், ஆனால் ஓரிறை கொள்கையை (முஸ்லிம்களை) எதிர்க்க வில்லை, எதிர்க்காத காரணத்தால் தான் '' இன இழிவு தீர இஸ்லாமே தீர்வு '' என்று முழங்கினார்.
இருதலை கொள்ளி எறும்பு
இன்றைய திக வை இயக்கும் வக்கீல் வீரமனி அவர்கள் தந்தை பெரியார் உருவாக்கிய தன்னலமற்ற இயக்கத்தை தன்னுடைய சுயநலத்திற்காக ஓட்டு வங்கியாக மாற்றினார் மறைந்த பெரியாரை அன்னா, எம்.ஜி.ஆர் ரேஞ்சுக்கு அரசியல் வாதியாக்கி அவருக்கு சிலைவடித்து மாலை அணிவித்து திக வை காசு காய்க்கும் மரமாக்கினார்;.
அன்று அரசியல் வாதிகள் பெரியாருடைய வீட்டைத் தேடி வந்தனர்;. இன்று அரசியல் வாதிகளுடைய வீட்டைத் தேடி வீரமனி ஓடுகிறார்.
அசுர வேகத்தில் ஆளும் கட்சி தலைவரை, தலைவியை எதிர்த்து (பெட்டிக்காக) கூக்குரலிடுவார் பெட்டி கிடைத்ததும் சமூக சேவகர் (சேவகி) பட்டம் வழங்கி விட்டு பெட்டிப் பாம்பாய் அடங்கி விடுவார்.
முஸ்லீம்கள் நடத்தும் கூட்டங்களில் கலந்து கொண்டு நாங்கள் உங்கள் தோழன் என்றுக் கூறுவார் அந்தப் புறத்தில் தங்களுடைய பத்திரிக்கையில் அரசியல்(பாஷிச)வாதிகளையும், தொண்டர்களையும் உற்சாகப் படுத்துவதற்காக சத்திய இஸ்லாத்தை பொய் மார்க்கம் என்று எழுதுவார் இருதலை கொள்ளி எறும்பாக மாறி மாறி வலம் வருவார்.
பெரியார் அவர்களுடைய கொள்கையால் ஈர்க்கப்பட்ட சிந்தனையாளர்களும், பகுத்தறிவாளர்களும் விரட்டியடிக்கப்பட்டு வீரமனிக்கு ஜால்ரா போடும் கூட்டத்தினரை உருவாக்கி கொண்டார்.
இஸ்லாத்தை விமர்சிப்பது என்பது பெரியார் வகுத்து வழங்கிய கொள்கை அல்ல, இன்றைய பாஷிச சிந்தனை கொண்ட அரசியல் வாதிகளையும், ஆளும் கட்சிகாரர்களையும், பிற்போக்குவாத திக தொண்டர்களையும் சரிக் கட்டுவதற்காக வீரமனி வகுத்துக் கொண்ட கொள்கை.
இஸ்லாம் கூறும் கருவளர்ச்சியின் படிநிலைகள்.
கடவுளை மறுக்கும் காட்டுமிராண்டிகள் தங்களுடைய தாயின் கருவறையில் இந்திரியத் துளியாக இருந்ததிலிருந்து அது என்ன காலகட்டத்தில் என்;ன நிலையாக மாற்றம் பெற்று இறுதியில் மனித உருவமாகி உலகுக்கு வந்தார்கள் என்பதை ஏகஇறைவனின் திருமறைக் குர்ஆனும்;, இறைத்தூதர் அவர்களுடைய பொண்மொழிகள் கூறும் துல்லியமான தகவல்களை இன்றைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கருவளர்ச்சியின் படிநிலைகள் குறித்து அளிக்கும் தகவல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து அது முரண்படவில்லை என்றால் கடவுளை மறுக்கும் காட்டுமிராண்டிகள் கடவுளையும், கடவுளின் திருத்தூதர் முஹம்மது நபி என்று சான்று பகர்ந்து சத்திய இஸ்லாத்தை ஏற்கத் தயாரா ? அதை மறுக்கும் படசத்தில் பெரியார் பாசறையிலிருந்து வந்தது உண்மை என்றால் குறைந்தது கருப்பு சட்டையை கழட்டி எறியத் தயாரா ?
இஸ்லாம் கூறும் கருவளர்ச்சியின் படிநிலைகள் ஒன்றுப்போதும் நபிகளாரின் மிஹ்ராஜ் பயணத்தையும் உண்மைப் படுத்தவும், மரணித்தோரை மீண்டும் எழுப்பும் மறுமையை உண்மைப் படுத்துவதற்கும், வீரமனிக்கும், வீரமனிக்கு ஜால்ரா அடிக்கும் போலி நாத்திகர்களுடைய முகத்திரையை உணர்வு கிழித்தெறிவதற்கு.
விண்ணியல் இயற்பியாளரை விழிபிதுங்கச் செய்த அருள்மறை வசனம்
ஜப்பானிய முஸ்லிம் அறிஞர்கள் சிலர் பெருவெடிப்பு நிகழ்ச்சி மற்றும் விண்ணியல் பற்றிய திருமறை கூறும் வசனங்களை ஜப்பான் டோக்யோ நகரத்தில் இயங்கும் பிரபல '' டோக்யோ பல்கலை கழகத்தின் '' பேராசிரியராகவும் '' மிகாடா தேசிய விண்வெளி ஆய்வு மையத்தின் '' டைரக்டராகவும் பணிபுரியும் பேராசிரியர் கோசாய் அவர்களிடம் எடுத்துச் சென்று திருக்குர்ஆன் கூறும் விண்ணியல் வசனங்களை அறிவியல் கூறும் விண்ணியல் தகவல்களுடன் ஒப்பிட்டுப்; பார்த்து அவரது இறுதி முடிவைக் கோரினர்.
அவர்கள் கேட்டுக் கொண்டதற்கினங்க அமைதியாக திருக்குர்ஆன் கூறும் விண்ணியல் வசனங்களை அறிவியல் கூறும் விண்ணியல் தகவல்களுடன் ஒப்பிட்டுப்; பார்த்த பேராசிரியர் அவர்கள் இது எப்பொழுது அருளப்பட்டது என்று கேட்டார் ? அதற்கவர்கள் 1400 வருடங்களுக்கு முன் என்ற பதிலை அளித்தனர் அதைக் கேட்டு வியந்துப் போன பேராசிரியர் அவர்கள் விண்வெளியிலிருந்து துல்லியமாக படம் பிடித்து அனுப்புவது போலுள்ளது திருக்குர்ஆன் கூறும் விண்ணியல் பற்றிய வசனங்கள் என்றுக் கூறினார்.
அறிவியல் என்றால் என்னவென்று தெரியாத 14வது நூற்றாண்டில் வாழ்ந்த படிப்பறிவில்லாத முஹம்மது நபியால் இதுபோன்ற செய்திகளை சுயமாக கூறமுடியாது கண்டிப்பாக இது தெய்வீக வார்த்தைகள் தான் என்றும் மேலும் முழங்கினார்.
அறிவியல் ஆராய்ச்சியின் தொடக்க காலகட்டத்திலிருந்து இன்றுவரையிலும் அனைத்து இயற்பியளாலர்களால் அறிவித்த பெருவெடிப்பு நிகழ்வின் ஒருமித்தக் கருத்தையே திருக்குர்;ஆன் துல்லியமாக முழங்குகிறது.
இந்த ஒரு பெருவெடிப்பு நிகழ்வு பற்றிய அல்லாஹ்வின் அருள்மறை வசனம் போதும் மறுமையை நிரூபிக்கவும், பெருமானார்(ஸல்) அவர்களை அல்லாஹ் தன் ஆற்றலின் மூலமாக விண்வெளிக்கு அழைத்துச் சென்றான் என்பதை நிரூபிக்கவும், 'உண்மை' யில் பொய்யைப் பரப்பும் நாத்திக வேடதாரிகளின் பொய்(நாத்திக) முகத்தை உணர்வு கிழித்தெறிவதற்கு.
கடவுளை மறுக்கும் காட்டுமிராண்டிகள் !
எந்த மூலதனமுமில்லாமல் உன்னைப் படைத்து (நாத்திகனே) நீ வாழ்வதற்கேற்ப தட்ப,வெட்ப நிலையுடன் பூமியை அமைத்து இதர கோள்களில் இல்லாத அளவுக்கு சுவாசிப்பதற்கு தேவையான அளவு ஆக்ஸிஜன், நைட்ரஜனுடன் கூடிய காற்றை நீ வாழுகின்ற பூமி என்ற கோளில் மட்டும் அனுப்பி சுவாசித்து வாழச் செய்த வல்லோன் தன் தூதரை தனது ஆற்றலின் மூலம் விண்ணேற்றம் செய்ததையும், மரணித்தவர்களை எழுப்புவதற்காக மறுமையை ஏற்படுத்துவான் என்பதையும் உணர மறுக்கின்ற நீ நன்றி கெட்டவன்.
ஒரு ஈயைக் கூடப் படைக்க வக்கற்ற (நாத்திகனே) உன்னைப் பார்க்கத் தயங்கினாலும் குறைந்தது வண்ணத்துப் பூச்சி உடம்பில் உள்ள ஓவியங்களைப் பார். படைப்பாளனின் ஆற்றலை அறிவாய் ! எண்ணற்ற வடிவில் படைத்தப் படைப்பாற்றல் மிக்க இறைவன் தன் தூதரை தனது ஆற்றலின் மூலம் விண்ணேற்றம் செய்ததையும், மரணித்தவர்களை எழுப்புவதற்காக மறுமையை ஏற்படுத்துவான் என்பதையும் உணர மறுக்கின்ற நீ நன்றி கெட்டவன்.
ஒருநாள் ஏற்படும் மிண்வெட்டினால் உயிர் வாழ முடியாமல் தவிக்கும் நீ (நாத்திகனே) உலகம் தோன்றியதிலிருந்து இன்றுவரையிலும் சடவடையாமல் இரவையும், பகலையும் மாறி மாறி வரச் செய்யும் இறைவன் நித்திய ஜீவன் நிலையானவன் தன் தூதரை தனது ஆற்றலின் மூலம் விண்ணேற்றம் செய்ததையும், மரணித்தவர்களை எழுப்புவதற்காக மறுமையை ஏற்படுத்துவான் என்பதையும் உணர மறுக்கின்ற நீ நன்றி கெட்டவன்.
காய்ந்து வெடித்துப் போன பூமியை உன் கண் முன்னே மழையைப் பொழியச் செய்து மரித்த பூமியை உயிர்ப்பிக்கச் செய்யும் வல்லோன் தன் தூதரை தனது ஆற்றலின் மூலம் விண்ணேற்றம் செய்ததையும், மரணித்தவர்களை எழுப்புவதற்காக மறுமையை ஏற்படுத்துவான் என்பதையும் உணர மறுக்கின்ற நீ நன்றி கெட்டவன்.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்


