ஏகஇறைவனின் திருப்பெயரால்...
கொள்கையற்ற குழப்பவாதிகள்
கொள்கையற்ற குழப்பவாதிகள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கொள்கையற்ற குழப்பவாதிகளின் அமைப்பு ஒன்று உலகில் இருக்கிறதென்றால் அது தமிழ்நாட்டில் இருக்கும் திராவிடர் கழகத்தைத் தவிற வேறெதுவுமிருக்க முடியாது என்று திட்டவட்டமாக எண்ணற்ற சான்றுகளுடன் நிரூபிக்க முடியும்.
கடந்த அவர்களுடனான சென்;னை விவாதத்தில் ஏகத்துவ ஆலிம்களால் அவர்களின் கொள்கைகள் கந்து கந்தாக கிழித்து தொங்க விடப்பட்டதை உலகம் கண்டு களித்தது.
சமீபத்தில் திருச்சி ஜோசப் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் பாதிரியார் மீது ஃபிரான்ஸிஸ்மேரி என்ற கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார் கொடுத்தன் பேரில் கைது செய்து வழக்கு பதியப்பட்டுள்ளதை எதிர்த்து திருச்சியில் சிலப் பெண்களும், தாழ்த்தப்பட்ட அமைப்பினரும் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரியார் திராவிடர் கழக அமைப்பினரும் ராஜேந்திரன் தலைமையில் ராஜரத்தினம் பாதிரியார் தாழ்த்தப்பட்ட கிருஸ்தவர் என்பதால் உயர் சாதி கிருஸ்தவருக்கு அந்தப் பதவியை பறித்தக் கொடுப்பதற்காக சதி திட்டம் நடப்பதாகக் கூறி கலந்து கொண்டுள்ளனர்.
தாழ்த்தப்பட்டவர் என்ன மாதிரியான கேடித் தனத்திலும் ஈடுபடலாமா ? அபலைப் பெண்களை தேவாலயத்தின் அந்தப்புறத்து ஆசை நாயகிகளாக ஆக்கிக் கொள்ளலாமா ? இது தான் பெரியாரின் பாசறையில் பயின்று வந்த லட்சனமா ? இது தான் சமூக நீதிப் போராட்டமா ?
சமூகநீதிப் போராட்டம் என்றால் ஏமாற்றப்பட்ட அந்தப் பெண்களுக்காகத் தான் இவர்கள் போராடி இருக்க வேண்டும். மாறாக ஏமாற்றிய பாதிரியாருக்காகப் போராடியதன் மூலம் என்ன கை மாறியது என்று மக்கள் முனு முனுக்கின்றனர்.
பாதிக்கப்பட்டப் பெண்கள் வழக்குத் தொடுத்திருப்பதால் பாதிரியார் குற்றவாளியா> நிரபராதியா ? என்பதை கோர்ட் முடிவு செய்வதற்குள் அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால் குற்;றமற்றவர் தான் என்று முடிவு செய்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியதைப் பார்க்கும் பொழுது மக்கள் முனு முனுப்பதில் அர்த்தம் இருக்குமோ என்று நினைக்கத் தூண்டுகிறது.
இதற்கு முன்பொரு முறை இதே திருச்சியில் இதே பெரியார் திராவிடர் கழக அமைப்பினர் கொளத்தூர் மணி தலைமையில் கிருஸ்தவ இடுகாட்டில் கிருஸ்தவ தாழ்த்தப்பட்டவர்களை அடக்கம் செய்ய மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்;ப்பாட்டம் செய்த பொழுது ராஜரத்தினம் போன்ற உயர் பதவியில் இருக்கும் தாழ்த்தப்பட்ட பாதிரிகள் எவரும் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டக் காரர்களை உற்சாகப்படுத்த வில்லை என்பது குறிப்பிடத் தக்கது ?
அவர்களுக்கு அந்தப் பதவி ஊழல் செய்வதற்கும்> உல்லாசம் அனுபவிப்பதற்கும் தேவையாக இருப்பதால் பதவியில் இருக்கும்பொழுது தன் சமூகத்திற்கு என்ன அநீதி ஏற்பட்டாலும் போராட முன்வர மாட்டார்கள். மாறாக அவர்கள் இதுப் போன்று எதாவது சட்டத்தின் கிடிக்கிப்பிடியில் சிக்கிக்கொண்டால் தப்பித்துக் கொள்வதற்காக நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் என் பதவியைப் பறிப்ப்தாற்காக இப்படி செய்கிறார்கள் என்று போலியாக அழுது கொண்டு சில அமைப்புகளைத்தேடி அமைப்புக்கு டொனேசன் என்றப்பெயரில் பிளாங்க் செக்குடன் ஓடுவார்கள்.
வீரமனி வகையறாக்கள்
1972ல் அன்னாதுரை நடத்திய உலகத்தமிழ் மாநாட்டை பெரியார் அவர்கள் விடுதலை பத்திரிகையில் உலகத் தமிழ் மாநாடாம் ? வெங்காய மாநாடாம் ? என்று நக்கலடித்து தலையங்கம் எழுதி விட்டு கழக கண்மனிகளை போக வேண்டாம் என்று கன்டிசன் போட்டார்.
அதற்கு அவர் கூறியக் காரணம் இந்த மாநாடு என்ன சாதனை புரியப்போகிறது ? மாநாடு முடிந்தப்பிறகு சூத்திரன்> சூத்திரனாகவும்> ஆரியன் ஆரியானகவும் தான் இருக்கப் போகிறான். தமிழை வளர்ப்பதால் மட்டும் தமிழின இழிவு ஒழியப்போவதில்லை என்று காரணமும் எழுதினார்.-விடுதலை 15.12.1972.
இது ஒருவகையில் சிந்திக்க வேண்டிய கருத்தாக இருந்தாலும் அவர் இருக்கும் போது சிந்தித்தவர்கள் அவர் இறந்தப்பின் சிந்திக்க மறுத்து கொள்கையிலிருந்து தடம் புரன்டனர்.
திக விலிருந்து பிரிந்துப் போனவர்களை எதிர்த்து அடிக்கடி விமர்சனம் செய்யும் வீரமனி அன்று அண்ணாதுரை நடத்திய உலகத் தமிழ் மாநாட்டிற்கு போகாமல் பெரியாரின் கட்டளைக்கு பெட்டிப் பாம்பாய் கட்டுப்பட்டுக் கிடந்தவர் இன்று கலைஞரின் செம்மொழி மாநாட்டிற்கு வரவேற்பாளராக மாறினார்.
இந்த லட்சனத்தில் நாங்கள் தான் அசல் பெரியாரின் வாரிசுகள் என்று இருப் பிரிவினரும் அடிக்கடி முடியைப் பிடித்துக் கொண்டு கோர்ட் வாசலில் கிடப்பார்கள்.
நாங்கள் தான் அசல் திக வினர் என்று இருதரப்பினரும் முட்டி மோதிக் கொள்வதெல்லாம் பெரியார் சேகரித்து வைத்தக் கொள்கைக்காக அல்ல மாறாக பெரியார் எடைக்கு எடை திரட்டி சேர்த்த சொத்துக்களுக்காகத் தான் என்பதற்கு இருப்பிரிவினரின் கொள்கையற்ற நிலைப்பாடுகள் தெளிவுப் படுத்துகின்றன
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்